×

தூத்துக்குடியில் கருத்தப்பாலம் சீரமைப்பு பணி

 

தூத்துக்குடி, பிப்.11:தூத்துக்குடியில் கருத்தப்பாலம் சீரமைப்பு பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள ஆண்டாள்தெரு வழியாக செல்லும் ஓடையில் அமைந்துள்ள கருத்தப்பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தை உடைத்துதான் மழைநீர் வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்நிலையில், கருத்தப்பாலம் சீரமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பணிகளை சிறப்பாக, தரமான முறையில் செய்யுமாறு ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ஜான்சிராணி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, அமைச்சரின் உதவியாளர்கள் மணி, அல்பர்ட் பிரதீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடியில் கருத்தப்பாலம் சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Thappalam ,Thoothukudi ,Minister ,Geethajeevan ,Andal Street ,Selvanayakpuram ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது