×

பூந்தமல்லி அருகே பைக் மீது லாரி மோதி மருந்தக ஊழியர் பலி

பூந்தமல்லி: அரக்கோணத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(24), இவர், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் தங்கி பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்தக பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல் ரஞ்சித்குமார் வழக்கம்போல் வேலைக்கு செல்ல பைக்கில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, பைக்கின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரஞ்சித்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் முருகன்(45), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் இறந்துபோன ரஞ்சித்குமாருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பூந்தமல்லி அருகே பைக் மீது லாரி மோதி மருந்தக ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Ranjith Kumar ,Arakkonam ,Sembarambakkam ,Dinakaran ,
× RELATED கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை