×

மாவட்ட சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில் 10.42 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: கலெக்டர் தகவல்


திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு அல்பெண்டா ஜோன் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால் தலைமை தாங்கினார். குடும்ப நலத்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) பி.சேகர் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தானும் சாப்பிட்டார். அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டுதோறும் 9ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஒவ்வொரு குழந்தையும் புழுக்கள் இல்லாததாக மாற்றும் முயற்சியாகும். இத்திட்டம் கடந்த 2015 முதல் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 20 வயது முதல் 30 வயதுடைய பெண்கள், கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர, அனைவருக்கும் அங்கன்வாடி மையம் மூலம் வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்பெண்டசோல் அரை மாத்திரை, 2 முதல் 19 வயதுவரையில் 1 மாத்திரை, 20 முதல் 30 வயதுவரை உள்ள பெண்களுக்கு கருவுற்ற, பாலூட்டும் தாய்மார்கள் தவிர ஒரு மாத்திரையும் என 7 லட்சத்து 75 ஆயிரத்து 834 குழந்தைகளுக்கும், 2 லட்சத்து 67 ஆயிரத்து 105 பெண்களுக்கும் என 10 லட்சத்து 42 ஆயிரத்து 939 பேருக்கு வழங்கப்பட உள்ளன.

இந்த குடற்புழு நீக்க நாளில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 16ம் தேதி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளன. எனவே பெண்கள், குழந்தைகள் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், ஊராட்சி தலைவர் ஹரிபாபு, சுகாதாரத்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில் 10.42 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : health, family welfare department ,THIRUVALLUR ,DAY ,ALBENTA ZONE ,MELNALLATHUR ,Deputy Director of Health Department ,K. R. Jawaharlal ,District Health, Family Welfare Department ,Dinakaran ,
× RELATED உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்...