×

மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார்


ஆவடி: ஆவடியில் விலையில்லா மிதிவண்டியை அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி அரசு உதவி பெறும் பள்ளி 11ம் வகுப்பு பயின்ற 540க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மிதிவண்டிகளை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் வழங்கினார்.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் ஆவடி இமாக்குலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 540 மாணவிகளுக்கு சுமார் ₹30 லட்சம் மதிப்பிலான மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், மண்டல குழு தலைவர் ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், மாநகர செயலாளர் சண்பிரகாஷ், பகுதிச் செயலாளர் நாராயணபிரசாத், திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், ஆவடி மாமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Cha. M. Nassar ,Avadi ,Awadi ,M. Nassar ,AVADI GOVERNMENT ,THIRUVALLUR DISTRICT ,
× RELATED ஆவடி, திருவேற்காடு பகுதியில் உள்ள...