×
Saravana Stores

வேளாண் கல்லூரியில் நெல் விதைகள் விற்பனை

 

மதுரை, பிப். 11: மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள மத்திய பண்ணையில் அரசு சான்றளிக்கப்பட்ட, தரமான முதல் மற்றும் இரண்டாம் நிலை ஆதார நெல் விதைகள் விற்பனைக்கு உள்ளன. விவசாயிகளின் தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்வதில் மதுரை வேளாண் கல்லூரி முக்கிய பங்களிக்கிறது. அந்த வகையில் நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிக மகசூல் பெறும் வகையில் தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிக மகசூல் தரும் நெல் ரக விதைகள் தற்போது விற்பனைக்கு உள்ளன. மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், அதிக மகசூல் தரும் கீழ்கண்ட நெல்ரக விதைகளை வாங்கி பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம். சான்றுபெற்ற நெல் ரகங்களின் இருப்பு மற்றும் விலை விவரம், ஐ.ஆர்20 – ரூ.42, சி.ஆர்.1009 துணை1 -ரூ.40, அம்பை-ரூ.40, டிகேஎம்13 -ரூ.37க்கு விற்கப்படுகிறது. இவை அனைத்தும் 30 கிலோ பைகளில் விற்பனைக்கு உள்ளன. இது குறித்து மேலும் விவரங்களுக்கு 94420-54780 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post வேளாண் கல்லூரியில் நெல் விதைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Central Farm ,Madurai Agricultural College ,Research Station ,Dinakaran ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!