×

125 நாடுகளில் இந்தியாவுக்கு 111வது இடம்: மோடி அரசை சாடிய கே.எஸ்.அழகிரி

மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜ முயற்சிக்கிறது என்று் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பாஜ ஆட்சியின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக கடன் சுமை அதிகரித்து வருகிறது. ஒன்பதரை ஆண்டுகளில் ஒன்றிய பாஜ அரசு ரூ.117 லட்சம் கோடி கூடுதலாக கடன் வாங்கியிருக்கிறது. பட்ஜெட் தொகையில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட மட்டுமே பயன்படுத்துவதால் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. ஏழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் சொத்து குவிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸ்பார்ம் நிறுவனம் 2023ல் வெளியிட்ட அறிக்கையின்படி மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினர் இந்தியாவின் சொத்து மதிப்பில் 77 சதவிகிதத்தை வைத்துள்ளனர். ஆனால், 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பு ஒரு சதவிகிதம் தான் உயர்ந்துள்ளது. கடந்த 2000ல் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்தது, 2023ல் 169 ஆக உயர்ந்தது தான் மோடி ஆட்சி சாதனை.

அதானி, அம்பானியின் சொத்து பல மடங்கு குவிந்திருக்கிறது. இதனால் பாஜவுக்கு தேர்தல் நிதி குவிகிறது. 2018 முதல் 2023 வரை அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ.9,200 கோடி. இதில் பாஜ பெற்றது மட்டும் ரூ.5,272 கோடி. இது 52 சதவிகிதம். மார்ச் 2023 பாஜ வங்கி கணக்கில் ரூ.3,596 கோடி டெபாசிட் இக்கிறது. ஆனால், 55 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் வங்கி கணக்கில் இருப்பதோ ரூ.162 கோடிதான். 2023 உலக பசி குறியீட்டின்படி 125 நாடுகளில் 111-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இத்தகைய அவலநிலைக்கு இந்தியாவை கொண்டு சென்று சாதனை படைத்தவர்தான் பிரதமர் மோடி. மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கடந்த ஒன்பதரை ஆண்டு ஜனநாயக விரோத, பாசிச ஆட்சிக்கும், பொருளாதார பேரழிவுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி.

 

The post 125 நாடுகளில் இந்தியாவுக்கு 111வது இடம்: மோடி அரசை சாடிய கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Tags : KS Alagiri ,Modi government ,KS Azhagiri ,BJP ,Tamil Nadu Congress ,President ,KS Azlagiri ,Union BJP government ,India ,
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...