×

இரும்பு கடையில் தீ விபத்து

திருவொற்றியூர்: எர்ணாவூர் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜா (30), எர்ணாவூர் மேம்பாலம் அருகே பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார்.  நேற்று அதிகாலை இவரது கடையில் தீப்பிடித்தது. தகவலறிந்து, எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் இருந்து வந்த 12 தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

The post இரும்பு கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Maharaja ,Ernavur Mullai Nagar ,Ernavur ,Ennore, Tiruvottiyur ,Dinakaran ,
× RELATED என்னோட 50-வது படம் இது! - Vijay Sethupathi Emotional Speech at Maharaja Press Meet | Dinakaran news.