×

9 மாத கால முடிவுகளில் எல்ஐசி லாபம் ரூ.26,913 கோடி

சென்னை: டிசம்பர் 2023 அன்றுடன் முடிவடைந்த ஒன்பது மாத முடிவுகளின்படி, எல்ஐசி ரூ.26,913 கோடி லாபம் ஈட்டியுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் கடந்த 31.12.2023 அன்றுடன் முடிவடைந்த காலத்தில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.26,913 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளது. அதன்படி, பங்குதாரர்களுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு ரூ.4 அறிவிக்கப்பட்டுள்ளது. புது வணிக மதிப்பு (VNB) 8.40 சதவீதம் அதிகரித்து ரூ.5,938 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், லாப பங்களிப்பற்ற ஆண்டு பிரிமிய தொகை 49.08 சதவீதம் அதிகரித்து, ரூ.3,299 கோடியாக உயர்ந்துள்ளது. தனிநபர் வணிகத்தில் லாப பங்களிப்பற்ற ஆண்டு பிரிமியம் 14.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. புது வணிக மொத்த லாப வரம்பு மதிப்பு 16.6 சதவீதமாக உள்ளது. கடந்த 31.12.2023 வரையிலான காலத்தில் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு (AUM) 11.98 சதவிகிதம் அதிகரித்து ரூ.49,66,371 கோடியாக உயந்துள்ளது. 31.12.2023 முடிவில் முதல் பிரிமிய வருமான அடிப்படையில் 58.90 சதவீத சந்தை பங்களிப்போடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இதுதவிர, தனிநபர் பிரிமிய வருமானம் ரூ.2,09,719 கோடிகளாக உயந்துள்ளது.

இதுகுறித்து எல்.ஐ.சி. நிறுவன தலைவர் சித்தார்த்த மொஹந்தி கூறியதாவது: எல்ஐசியின் நிலையான மற்றும் தொடர் அணுகுமுறையின் மூலம் திட்டங்களை பன்முகப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளோம். லாபத்தில் பங்கு பெறாத புது வணிகம், கடந்த 9 மாதங்களில் 14.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொடர் முயற்சிகளின் காரணமாக புது வணிக மொத்த லாப வரம்பு மதிப்பு 16.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. எல்ஐசியின் ஒவ்வொரு செயலும் அனைத்து தரப்பினருக்கும் மதிப்பு கூட்டும் விதத்தில் அமைய பாடுபட்டு வருகிறோம்.

எல்ஐசி வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டங்களை வடிவமைக்க உறுதி பூண்டுள்ளோம். மேலும், எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் பங்களிப்போடு திட்டங்கள் மற்றும் பாலிசி சேவைகளை வழங்குவோம். எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் மாற்றங்கள் எங்கள் வணிக செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டு வரும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post 9 மாத கால முடிவுகளில் எல்ஐசி லாபம் ரூ.26,913 கோடி appeared first on Dinakaran.

Tags : LIC ,CHENNAI ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு;...