×

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைவி3 நிர்வாகி தலைமையில் திடீர் முற்றுகை போராட்டம்: சத்தி ஆனந்தன் உட்பட 200 பேர் கைது

கோவை: கோவையில் உள்ள மைவி 3 ஆட்ஸ் என்ற எம்எல்எம் நிறுவனம் மீது புகார்கள் குவிந்து வருகிறது. விளம்பரம் பார்த்து பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனுமதியின்றி கூட்டத்தை கூட்டியதாக கூறி மைவி3 ஆட்ஸ் நிர்வாக இயக்குநரான பீளமேடு பகுதியை சத்தி ஆனந்தன் (36) என்பவர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த மோசடி குறித்து தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சத்தி ஆனந்தன் மற்றும் முதலீட்டாளர்கள் வந்திருந்தனர். அப்போது போலீஸ் கமிஷனரை சந்தித்து பேச வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சத்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்கள் சுமார் 200 பேருடன் கமிஷனர் அலுவலகத்திற்குள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சத்தி ஆனந்தன் உட்பட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

The post கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைவி3 நிர்வாகி தலைமையில் திடீர் முற்றுகை போராட்டம்: சத்தி ஆனந்தன் உட்பட 200 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore Police Commissioner ,MyV3 ,Satthi Anandan ,Coimbatore ,MLM ,Myv3 Ads ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...