×

எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி, விடுதி கட்டிடம் திறப்பு

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.65 கோடி மதிப்பில் புதிய நரம்பியல் பிரிவு கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் எழும்பூர், நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் ரூ.12.65 கோடி செலவில் கட்டப்பட்ட பயிற்சி பள்ளி மற்றும் விடுதி கட்டிடம், அதிநவீன ஒலி ஒளி சாதனங்களுடன் கூடிய கலந்தாய்வு கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தபோது சிறப்பாக களப் பணியாற்றிய 7000 மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

இதில், எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன், நரம்பியல் மருத்துவத் துறை இயக்குநர் பாலசுப்பிரமணியன், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை இயக்குநர் ராகவேந்திரன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி, விடுதி கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nursing Training School ,Egmore Family Health Training Centre ,CHENNAI ,Rajiv Gandhi Government Medical College Hospital ,Egmore Welfare and Family Welfare Training Center ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!