×

2023-24ம் நிதியாண்டிற்கான இபிஎப்ஓ வட்டி விகிதம் 8.25 சதவீதம் நிர்ணயம்: விரைவில் வரவு வைக்கப்படும்

புதுடெல்லி: தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய சேமிப்பாக இருக்கும் பிஎப் (வருங்கால வைப்பு நிதி) கணக்கிற்கு ஒவ்வொரு ஆண்டிற்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். இதுதொடர்பாக ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடந்த வாரிய குழு கூட்டத்தில், 2023-24ம் ஆண்டிற்கான பிஎப் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு பிஎப் கணக்குகளில் வரவு வைக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டில் 8.8 சதவீதமாக இருந்த பிஎப் வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு கடந்த 2021-22ல் 8.1 சதவீதமாக கடும் வீழ்ச்சியை கண்டது. 1977-78ல் பிஎப் திட்டம் தொடங்கப்ப்பிறகு நிர்ணயிக்கப்பட்ட மிகக் குறைவான வட்டி விகிதம் இது. இந்நிலையில் தற்போது 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

The post 2023-24ம் நிதியாண்டிற்கான இபிஎப்ஓ வட்டி விகிதம் 8.25 சதவீதம் நிர்ணயம்: விரைவில் வரவு வைக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Union Ministry of Labor ,Union Labor ,and Employment ,Minister ,Bhupender ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...