×

3-5வது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் டெஸ்ட் தொடரில், எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் தேர்வு செய்யப்படாத நிலையில், கோஹ்லி சொந்த காரணங்களுக்காக இந்த போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று முன்னிலை பெற்ற நிலையில், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் பிப்.15ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடாத கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். எனினும், இவர்கள் முழு உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ், கோஹ்லி இல்லை: காயத்தால் அவதிப்படும் ஷ்ரேயாஸ் அய்யர் அதில் இருந்து மீண்டுவிட்டாலும், தேர்வு செய்யப்படவில்லை. சொந்த காரணங்களுக்காக முதல் 2 டெஸ்டில் விளையாடாத கோஹ்லி, எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். ரஜத் பத்திதார் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.

* இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், ரஜத் பத்திதார், சர்பராஸ் கான், துருவ் ஜுரெல் (கீப்பர்), கே.எஸ்.பாரத் (கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

The post 3-5வது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Indian ,England ,Shreyas Iyer ,Kohli ,Dinakaran ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்