×

தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு


தூத்துக்குடி: தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விவசாயம் உள்பட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் கடன் தொல்லைகள் நீங்கி செல்வ வளம் பெருகிடவும், முன்ஜென்ம பாவங்கள் நீங்கி வளமாக வாழவேண்டியும் லட்சார்ச்சனையுடன் கூடிய சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.

இதையொட்டி காலை முதல் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமமம், கன்னிகா பூஜை, மஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஹோமமும் நடந்தது.தொடர்ந்து, மஹா பிரத்தியங்கிராதேவி மஹா காலபைரவருக்கு லட்சார்ச்சனை இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. மதியம் பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மஹா யாக வழிபாடுகள் தீபாராதனையுடன் நிறைவடைந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சித்தர்பீடம் வழிபாட்டுக்குழுவினர் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post தை அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Siddhar Peedam ,Tai Amavasai ,Srimaha ,Prathiangira ,Devi-Maha Kala ,Bhairava ,Srichithar Peetha, ,Koramballam, Thoothukudi ,
× RELATED பங்காரு அடிகளார் இல்லத்திற்கு சென்று...