- கஃபார்ஸ்தான்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- மாநில செயலாளர்
- பின்தங்கிய
- பின்தங்கிய மற்றும் சிறுபான்
- ரீதா ஹரிஷ் தக்கர்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சிறுபான்மையினரின் நலம்
- ஸ்டாலின்
- இஸ்லாமியவாதிகள்
- கபரஸ்தான்
- தமிழ்நாடு அரசு
சென்னை: மாநில பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. அதில், இஸ்லாமியர்களுக்கு கபர்ஸ்தான்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு கல்லறை தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன்படி, சிறுபான்மையினர் நல இயக்குநர் 22 மாவட்ட தலையிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசாங்க நிலங்களில் கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறை தோட்டங்கள் இல்லை என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களிடம் இருந்து அறிக்கை பெற்றிருந்தார்.
அதன்படி, இந்த மாவட்டங்களில் முதல்வர் அறிவித்தது போல், மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பில் கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைக்க தகுதியான அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் அது கிடைக்க பெறாத பட்சத்தில் தனியார் நிலங்களை கையகப்படுத்தி ரூ.10 கோடி செலவில் அமைத்திட ஒப்புதல் வழங்கிடுமாறு சிறுபான்மையினர் நல இயக்குநர் கேட்டு கொண்டதன் அடிப்படையிலும், முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாகவும் இந்த கருத்துருவினை அரசு நன்கு கவனமுடன் பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்து உத்தரவை பிறப்பிக்கிறது.
The post மாவட்ட தலைநகரங்களில் ரூ.10 கோடி செலவில் கல்லறை தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க ஒப்புதல்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.