×

பாஜகவால் அடைந்த பயன் எடப்பாடிக்கு தெரியும்… வேலூரில் தாமரை மலர்ந்தே தீரும் : புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி

சென்னை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் பாஜகவும், அதிமுகவும் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்க்க பாஜக காய் நகர்த்தி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டியிட உள்ளது. புதிய நீதிக் கட்சி கடந்த 6 மாதமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் நான் போட்டியிட உள்ளேன். வேலூர் தொகுதியில் தாமரை மலர்ந்தே தீரும். ஏற்கனவே 15 வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்துக்காக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் என்னென்ன பலன் வந்தது என எடப்பாடி பழனிசாமிக்கு நெரியும். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் கூட்டணியில் மாற்றம் வரலாம்,”இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாஜகவால் அடைந்த பயன் எடப்பாடிக்கு தெரியும்… வேலூரில் தாமரை மலர்ந்தே தீரும் : புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Etabadi ,BJP ,Justice Party ,A. C. ,Shanmugam ,Chennai ,Vellore ,Lok ,Sabha ,New Justice Party ,A. C. Sanmugham ,
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...