×

’அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ : விஜய், விஷால் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நடிகர் ரஜினிகாந்த் எஸ்கேப்!!

சென்னை: ’அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா புரடெக்‌ஷனுக்கும், இயக்குனர் ஐஸ்வர்யா படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். ‘வேட்டையன்’ படப்பிடிப்பு 80% நிறைவடைந்துள்ளது.

இன்னும் 20 % மீதமுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கவுள்ளேன்.” என்றார். விஜய், விஷால் அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ‘அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்றார்.முன்னதாக லால் சலாம் படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. நேற்று நடிகர் ரஜினிகாந்த் வீல் சேரில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ’அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ : விஜய், விஷால் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நடிகர் ரஜினிகாந்த் எஸ்கேப்!! appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Vijay ,Vishal ,Chennai ,Chennai airport ,Lyca Protection ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்