ஷிம்லா: இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7வது நாளாக தொடர்கிறது. இமாச்சல் மலைப் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தபோது சட்லஜ் நதிக்கரையில் கார் விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த உள்ளூர் ஓட்டுநர் டென்சிங் உயிரிழந்த நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி மாயமான நிலையில் அவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது. வெற்றி துரைசாமி பயன்படுத்திய செல்போன் மற்றும் அவரது உடமைகள் மீட்கப்பட்ட நிலையில், தேடும் பணி 7-ம் நாளாக நீடிக்கிறது.
இந்த நிலையில் 7ம் நாளான இன்று விபத்து நடந்த இடத்தில் வெற்றி துரைசாமி போல் உருவம் கொண்ட பொம்மையை ஆற்றில் வீசி நேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விபத்து எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக அவரைப் போல DEMO பொம்மையை ஆற்றில் வீசி, விபத்து நடந்தபின் உடல் எவ்வழியாக நதியில் சென்றிருக்கும் என மீட்புக் குழுவினர் நிகழ்த்திக்காட்டி உள்ளனர். ஸ்பா டைவிங் வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினருடன் 100-க்கும் மேற்பட்டோர் நேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த டி.என்.ஏ. சோதனை முடிவுகள் வெளிவர வாய்ப்பு என கின்னூர் மாவட்ட ஆட்சியர் அமித்குமார் சர்மா தந்தி டிவிக்கு தகவல் அளித்துள்ளார்.
The post 7வது நாளாக வெற்றி துரைசாமியை தேடுதல் பணி.. உருவ பொம்மையை ஆற்றில் வீசி உடல் எவ்வழியாக சென்றிருக்கும் என ஆய்வு appeared first on Dinakaran.