×

பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வருகை..! 5,000 நிவர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நாளை ஒருநாள் பயணமாக சென்னை வரவுள்ளார். அவருடைய முழுமயான பயண திட்டங்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து நாளை காலை சரியாக 9.20 மணியளவில் புறப்படும் ஜெ.பி.நட்டா, சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 12.45 மணியளவில் வரவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்கின்றனர்.

அங்கிருந்து நேரடியாக தனியார் ஹோட்டலுக்கு செல்லகூடிய நட்டா அங்கு 12.55 மணியளவில் மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த கூட்டத்தில் சுமார் 13 முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்ந்துகொள்கின்றனர். அப்போது கூட்டணி கட்சி தலைவர்களும் ஜெ.பி.நட்டாவை சந்திகின்றனர். இந்த கூடத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் பாஜக தயாராகி வருவது,வியூகங்களை வகுப்பது, இன்று தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியுள்ளது. அது தொடர்பாகவும், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் இருக்கிறது என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து 3.45 மணியில் இருந்து 5 மணிவரை செங்கல்பட்டில் இருக்க கூடிய SRM காட்டன்குளத்தூரில் இருக்க கூடிய கல்லூரி வளாகத்தில் 5,000 நிவர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், பூத் கமிட்டியை வழுப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்தும் விரிவான ஆலோசனை என்பது நடைபெறவுள்ளது.

தொடர்ச்சியாக நாளை துறைமுகம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பாதயாத்திறை செல்ல கூடிய ஏற்பாடுகள் என்பது பாஜக சார்பில் செய்யபட்டுள்ளது. இதற்கு காவல்துறை சார்பில் இதுவரை அனுமதி என்பது வழங்கபடவில்லை. அது தொடர்பாக இன்றைய தினம் பாஜக சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

The post பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வருகை..! 5,000 நிவர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ப்பு appeared first on Dinakaran.

Tags : National President ,BJP ,JP Natta ,Tamil Nadu ,Chennai ,J.P. Natta ,Delhi ,
× RELATED “ஓ.பன்னீர்செல்வம் மிகவும்...