×

ஓரே ஆண்டில் தேர்தலுக்காக ரூ.1,092 கோடி செலவிட்ட பாஜக… காங்கிரஸ் கட்சி ரூ.192 கோடி மட்டுமே : தேர்தல் ஆணையத்தில் தகவல்

சென்னை : 2022 -23ம் நிதியாண்டில் தேர்தலுக்காக மட்டும் பாஜக ரூ.1092 கோடி செலவிட்டுள்ளது அம்பலம் ஆகியுள்ளது. அதே நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.192 கோடி மட்டுமே தேர்தலுக்காக செலவிட்டுள்ளது. 2021 – 2022 நிதியாண்டில் தேர்தலுக்காக ரூ.646 கோடி செலவு செய்த பாஜக, அடுத்த நிதியாண்டில் 2 மடங்கு செலவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில் தேர்தல் செலவுகள் காட்டப்பட்டுள்ளன. அதில்,”தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பாஜக ஒரே ஆண்டில் சுமார் ரூ. 432 கோடி செலவு செய்துள்ளது என்றும் தேர்தல் பயணங்களுக்காக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் வாடகைக்கு மட்டும் பாஜக ஒரே ஆண்டில் ரூ.78 கோடி செலவு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2022-23ம் நிதியாண்டில் பாஜகவுக்கு வங்கிகளில் இருந்து வட்டியாக மட்டும் ரூ.237 கோடி கிடைத்துள்ளது. வங்கிகளில் இருந்து வட்டி மூலம் பாஜகவுக்கு கிடைக்கும் வருவாயும் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மட்டும் ஒரே ஆண்டில் ரூ.75 கோடியை பாஜக கொடுத்துள்ளது. பாஜக கட்சியின் வருமானம் ரூ.2,364 கோடி என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு கிடைத்த 54% வருவாய்(ரூ.1120 கோடி) தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கிடைத்துள்ளது.

பழைய செய்தித் தாள்கள் விற்றதன் மூலம் பாஜகவுக்கு சுமார் ரூ.16 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பழைய செய்தித் தாள் விற்பனை மூலம் 2021-22 ல் ரூ.1.33 லட்சம் மட்டுமே பாஜகவுக்கு வருவாய் கிடைத்துள்ளது பழைய செய்தித் தாள் விற்பனை மூலம் 2021-22 ஐ விட 2022-23ல் சுமார் 10 மடங்கு அதிகமாக பாஜகவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. பழைய செய்தித் தாள் விற்ற லாபம் 10 மடங்கு அதிகரித்த அதேநேரத்தில் புதிய செய்தித் தாள் வாங்கிய செலவு ரூ.6 லட்சம் குறைந்துள்ளது. இதனிடையே 2022 – 23 காங்கிரஸ் கட்சிக்கு ரூ.452 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

The post ஓரே ஆண்டில் தேர்தலுக்காக ரூ.1,092 கோடி செலவிட்ட பாஜக… காங்கிரஸ் கட்சி ரூ.192 கோடி மட்டுமே : தேர்தல் ஆணையத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Election Commission ,CHENNAI ,AMBALAM ,Congress party ,Information in ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...