×

அணைக்கட்டு அடுத்த வேலங்காடு கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு எருது விடும் விழா

*200 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது

அணைக்கட்டு : அணைக்கட்டு அடுத்த வேலங்காட்டில் தை அமாவாசையையொட்டி நடந்த எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேலங்காடு கிராமத்தில் தை அமாவாசை, பொற்கொடியம்மன் உற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நேற்று நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம், ஊராட்சி தலைவர் சைனலதாமணி முன்னிலை வகித்தனர். தாசில்தார் வேண்டா தலைமையில் விழா குழுவினர் உள்ளிட்ட அனைவரும் விழா உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து விழா நடந்தது.

கால்நடை மருத்து குழுவினரின் பரிசோதனைக்கு பின்னர் மாடுகள் ஒவ்வொன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. விழாவில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 200க்கும்மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது. இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரண்டனர்.

இதில் குறிப்பிட்ட இலக்கை குறைந்த வினாடிகளில் கடந்த மாட்டிற்கு முதல் பரிசாக 70 ஆயிரம், 2ம்பரிசாக ₹55 ஆயிரம், 3ம் பரிசாக ₹33 ஆயிரம் உட்பட மொத்தமாக 51 பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாடுகள் முட்டி காயமடைந்த 30 பேருக்கு அங்கு முகாமிட்டிருந்த பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
அதில் படுகாயமடைந்த 3 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அணைக்கட்டு போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விதி மீறி நடந்த விழா

எருது விடும் விழாக்கள் காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று விதி முறை பின்பற்றபட்டு வருகிறது. ஆனால் நேற்று வேலங்காடு கிராமத்தில் விதி மீறி காலை 7 மணிக்கே விழா தொடங்கி தாசில்தார் வருவதற்கு முன்பாகவே நடந்து கொண்டிருந்தது. அதன் பின்னர் 10.30 மணிக்கு தாசில்தார் வந்ததும் விழா நிறுத்தப்பட்டு விழா உறுதிமொழி ஏற்றபின் மீண்டும் விழா தொடங்கி நடந்தது.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதிகப்படியானோருக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று எருது விடும் விழா அனுமதி இன்றி நடந்தது. விழாவில் உள்ளூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்துவரப்பட்டு வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

மாடுகள் வரத்து குறைவாக இருந்ததால் ஒரே மாடு 4 சுற்றுகள் வரை விடப்பட்டது.தொடர்ந்து விழா பகல் 1மணி அளவில் முடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும், அனுமதியின்றி விழா நடந்தது குறித்து தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இது குறித்து அரியூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post அணைக்கட்டு அடுத்த வேலங்காடு கிராமத்தில் தை அமாவாசையை முன்னிட்டு எருது விடும் விழா appeared first on Dinakaran.

Tags : Ox calving ceremony ,New Moon ,Velangadu ,New Moon Festival ,Velangat ,Vellore district ,Amavasai ,Polchodiamman ,Ox ,
× RELATED சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி: கோயில் நிர்வாகம்