×

எல்க்ஹில் பகுதியில் வனத்திற்குள் குப்பைகள் வீசப்படுவதால் அதிகரிக்கும் சுகாதார சீர்கேடு

ஊட்டி : ஊட்டி அருகே எல்க்ஹில் பகுதியில் வனத்திற்குள் குப்பைகள் வீசி எறியப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.நகரம் மற்றும் வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் அனைத்தும் நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில் நகராட்சி சார்பில் ஊட்டி நகரத்தை தவிர்த்து வார்டு பகுதிகளில் சமீப காலமாக குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் வார்டு பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருகின்றன.

இந்நிலையில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட எல்க்ஹில் குமரன் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாள்தோறும் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படுவதில்லை. இதனால் குடியிருப்புவாசிகள் இங்குள்ள வனத்திற்குள் வீசி எறிகின்றனர். இதனால் இங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் குவிந்து காட்சியளிக்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதி மட்டுமின்றி நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post எல்க்ஹில் பகுதியில் வனத்திற்குள் குப்பைகள் வீசப்படுவதால் அதிகரிக்கும் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Elkhill ,Ooty ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...