×

திருப்பத்தூர், கந்திலியில் ஜூஸ் கடைகளில் ஆய்வு குளிர்பானங்களில் சாக்ரீம் பவுடர் கலந்தால் கடைக்கு ‘சீல்’

*உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

திருப்பத்தூர் : வேலூர் என்றாலே வெயிலுக்கு பெயர் போன ஊர் என்று பெயர் உள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் கடைக்கோடியில் உள்ள மாவட்டமாகும். தற்போது இந்த மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. காலையில் வரை பனி மூட்டம் ஏற்பட்டு 9 மணிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயில் தொடர்கிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம், கோடை காலம் என்பதால் பழச்சாறுகள் ஜூஸ், வகைகள் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் தாகம் தணிக்க குடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட குளிர்பானங்களில் சாக்ரீம் பவுடர் மற்றும் சுவையூட்டிகள் அதிக நிறம் கலந்த ஜூஸ், வகைகள் சுய தொழிலாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் மற்றும் கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரி பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அனைத்திலும் அதிக அளவில் சுவையூட்டிகள் மற்றும் சாக்ரீம் பவுடர்கள் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய அதனை ஆய்வு அறிக்கைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி பழனிச்சாமி கூறுகையில், ‘ஜூஸ் வகைகளில் அதிக அளவு கலர் பவுடர்கள் மற்றும் சக்கரைக்கு பதிலாக சாக்கிரீம் பவுடர் எனப்படும் பவுடர் கலப்பது சுவையூட்டிகள் சேர்ப்பது நடைபெறுகிறது.

இதனை தடுக்க இந்த ஆய்வு பணி தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெறும். மேலும் தற்போது இந்த கோடை காலத்தில் இதுபோன்ற சுவையூட்டிகள், நிறமூட்டிகள் மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறு எனப்படும் ப்ரூட் மிக்ஸர் உள்ளிட்டவைகளில் அழுகிய பழங்களை ஜூஸாக விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடையை பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என கூறினார்.

The post திருப்பத்தூர், கந்திலியில் ஜூஸ் கடைகளில் ஆய்வு குளிர்பானங்களில் சாக்ரீம் பவுடர் கலந்தால் கடைக்கு ‘சீல்’ appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Kandili ,Vellore ,Tirupathur district ,Vellore district ,Gandili ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்