×

தடை செய்யப்பட்ட நிறமி சேர்க்கை பஞ்சு மிட்டாய்கள் சோதனை

 

சிவகங்கை, பிப். 10: சிவகங்கை மாவட்டத்தில் பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதணை செய்தனர். தடை செய்யப்பட்ட நிறமிகளை பஞ்சு மிட்டாய் தயாரிக்க பயன்படுத்துவதாக கூறி பாண்டிச்சேரியில் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நேற்று பஞ்சுமிட்டாய்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர். உணவு பாதுகாப்பு ஆணையாளர் உத்தரவின் பேரில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்பவர்கள், பஞ்சுமிட்டாய் தயார் செய்யும் இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் பஞ்சு மிட்டாய் விற்பனை குறித்து சோதனை நடத்தினார். அங்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்த நிலையில் அவரிடம் இருந்த பஞ்சு மிட்டாய்கள் சோதணைக்காக எடுக்கப்பட்டு பரிசோதணை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. காரைக்குடியில் இந்த பஞ்சுமிட்டாய் தயார் செய்யப்படுவதாகவும், உ.பியை சேர்ந்த மேலும் 4 பேர் இப்பணியில் ஈடுபடுவதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து காரைக்குடியில் பஞ்சுமிட்டாய் தயார் செய்யும் இடத்திலும் சோதணை நடத்தப்பட்டது. அதிகமாக நிறமிகள் சேர்க்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களை பொதுமக்கள் வாங்க வேண்டாம். இதில் தடை செய்யப்பட்ட நிறமிகளை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பஞ்சு மிட்டாய் தயார் செய்யும் இடம், விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post தடை செய்யப்பட்ட நிறமி சேர்க்கை பஞ்சு மிட்டாய்கள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,Pondicherry ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்