- அமைச்சர்
- மய்யநாதன்
- செந்தன்குடி மாநிலப் பள்ளி
- புதுக்கோட்டை
- பொது
- பங்கேற்பு திறன் வகு
- அரசு பள்ளி
- சாந்தங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
- Keeramangalam
- தின மலர்
புதுக்கோட்டை, பிப்.10: புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடியில் அரசுப்பள்ளியில் பொதுமக்கள் பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறையை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களின் பங்களிப்போடு மாற்றங்களை கண்டு வருகிறது.
ஏராளமான அரசுப் பள்ளிகளில் தன்னார்வலர்களின் பங்களிப்பில் திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.அதே போல சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றங்களை கொண்டு வர நினைத்த பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் சேந்தன்குடி பள்ளியில் தன்னார்வலர்களின் பங்களிப்போடு திறன் வகுப்பறை அமைத்துள்ளனர். பொதுமக்களால் அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறையை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
The post சேந்தன்குடி அரசுப்பள்ளியில் திறன் வகுப்பறை: அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.