×

மருந்து கடை உரிமையாளரிடம் ஆன்லைனில் மோசடி

 

அன்னூர், பிப். 10: கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் அன்னூர் மெயின் ரோட்டில் மருந்து விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் வீட்டிற்கு உணவு அருந்த சென்றபோது, இவரது செல்போனுக்கு ஒருவர் இந்தியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட மருந்துகள் வேண்டும், அதை பேக் செய்து வையுங்கள், நான் வந்து பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். அதில் அவர் 2220 ரூபாய்க்கு மருந்துகளை ஆர்டர் செய்துள்ளார்.

பின்னர் ஹரிதாஸ் தனது கடையில் இருந்த ஊழியர்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து சற்று நேரத்தில் மீண்டும் தொடர்பு கொண்ட மருந்து கடை உரிமையாளர் ஹரிதாஸிடம் இந்தி பேசிய நபர் தான் 2 ஆயிரத்து 220க்கு பதில், ரூ.22 ஆயிரம் 220 ஐ கூகுள் பே மூலம் அனுப்பிவிட்டேன் அதன் மீதியை எனக்கு அனுப்புங்கள், எனது நண்பர் வந்து பெற்றுக் கொள்வார் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ஹரிதாஸ் மீதமுள்ள 20 ஆயிரம் பணத்தை அவருக்கு மீண்டும் கூகுல் பே மூலமாக திருப்பி அனுப்பியுள்ளார்.

ஹரிதாஸ் மீண்டும் கடைக்கு வந்து வெகு நேரம் காத்திருந்த போதும் வாங்கிய மருந்துகளை யாரும் பெற்று செல்லவில்லை. இதனையடுத்து தனது வங்கிக் கணக்கை பார்த்தபோது எந்த பணமுமே வரவில்லை. மர்ம நபர் வங்கியில் இருந்து வந்தது போல் மெசேஜை டைப் பண்ணி அனுப்பி உள்ளது தெரிய வந்தது. அப்போதுதான் இவருக்கு தெரிய வந்தது, தான் ஏமாந்து விட்டோம் என்பது. இதனால் அன்னூர் பகுதியில் உள்ள அனைவரும் உஷாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மருந்து கடை உரிமையாளரிடம் ஆன்லைனில் மோசடி appeared first on Dinakaran.

Tags : Annur ,Haridas ,Coimbatore ,Annur Main Road ,
× RELATED சுடுநீரை ஊற்றிய மனைவி உடல்வெந்து கணவன் பரிதாப சாவு: தக்கலை அருகே பரபரப்பு