×

சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இன்டர்போல் உதவியுடன் விசாரணை: மாநகர போலீஸ் கமிஷனர் ரத்தோர் தகவல்

சென்னை, பிப்.10: வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள வித்யோதயா பள்ளி வளாகத்தில் ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு’ மற்றும் பள்ளி பாதுகாப்பு பகுதி திட்டத்தை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்து, தன்னார்வலர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பேசியதாவது: இந்தியாவில் எங்கேயும் இல்லாத வகையில் இந்த திட்டம் துவங்கி வைக்கிறோம். இந்த திட்டத்திற்கு ‘பள்ளி பாதுகாப்பு பகுதி’ என பெயரிட்டுள்ளோம். ஆசிரியர்கள், பெற்றோர்களையும் இணைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று (நேற்று) கூட பள்ளியில் வளாகத்தில் தான் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். எனவே அது முற்றிலும் தவறான வதந்தி. மிரட்டல் விடுத்தவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஏற்கனவே உள்ள பட்டியலில் இல்லை, புதிதாக மிரட்டல் விடுத்துள்ளார். இன்டர்போல் போலீசார் உதவியுடனும் விசாரணை நடக்கிறது. இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களுக்கு யாரும் பயப்பட தேவையில்லை. 2 வகையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை இதுபோன்று சமயங்களில் காவல்துறை கையாளும். எனவே தேவை இல்லாமல் பதற்றமடைய வேண்டாம் என்றார்.

The post சென்னையில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இன்டர்போல் உதவியுடன் விசாரணை: மாநகர போலீஸ் கமிஷனர் ரத்தோர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Interpol ,Municipal Police Commissioner ,Rathore ,Chennai ,City Police Commissioner ,Sandeep Roy Rathore ,Vidyodaya ,School ,Campus ,Valluvar Kottam ,City Police Police Commissioner Rathore ,Dinakaran ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...