×

சேரன்மகாதேவி சாட்டுப்பால விநாயகர் கோயிலில் பால்குட விழா

வீரவநல்லூர், பிப். 10: சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே சாட்டுப்பால விநாயகர் கோயில் 69வது ஆண்டு பால்குட விழா நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக வந்த பால்குட ஊர்வலம் கோயிலில் முடிந்தது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. மதியம் 1 மணிக்கு பிரசாதம் வழங்குதல், இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலர் இளங்குமரன், அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் பழனிக்குமார், கணக்கர் மகேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை சேரன்மகாதேவி தொழில் வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.

The post சேரன்மகாதேவி சாட்டுப்பால விநாயகர் கோயிலில் பால்குட விழா appeared first on Dinakaran.

Tags : Balkuta Festival ,Cheranmahadevi Chatuppala Vinayagar Temple ,Veeravanallur ,Chatuppala Vinayagar Temple ,Cheranmahadevi Bus Stand ,Balkuta ,Tamiraparani river ,Balkuda ,Cheranmakadevi Chatuppala Vinayagar Temple Balkuda ,Dinakaran ,
× RELATED நெல்லை அருகே உரிய ஆவணமின்றி பைக்கில் கொண்டுசென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்