×

₹2லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், பிப்.10: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில் 60 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கிலோ ₹73.60 முதல் ₹85.60 வரையிலும், 2ம் தரம் ₹57.80 முதல் ₹70.80 என மொத்தம் ₹2லட்சத்திற்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் வரும் 16ம் தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

The post ₹2லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Tiruchengode Agricultural Producers Cooperative Sales Association ,Dinakaran ,
× RELATED பழுதான தண்ணீர் தொட்டி இடிப்பு