×

மாணவி மாயம்

ஊத்தங்கரை, பிப்.10:ஊத்தங்கரை அடுத்த சின்னகுன்னத்துரை சேர்ந்த 17 வயது மாணவி தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மாலையிலும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசில் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

The post மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Chinnakunnathur ,Aroor, Dharmapuri district ,
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது