×

புதுச்சேரியில் இருந்து ஆட்ேடாவில் புகையிலை கடத்தி வந்தவர் கைது

விக்கிரவாண்டி, பிப். 10: விக்கிரவாண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சமீப நாட்களாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விழுப்புரம் எஸ்.பி தலைமையில் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் பாண்டியன் மற்றும் உதவி ஆய்வாளர் காத்தமுத்து தலைமையில் போலீசார் விக்கிரவாண்டி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திருக்கனூர் வழியாக ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்தது.

சோதனைச்சாவடி அருகே அதிவேகமாக வந்த ஆட்டோ நிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துரத்திச் சென்று அந்த ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஆட்டோவில் மூன்று சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புதுச்சேரியில் இருந்து கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆட்டோவில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த நாம்தேவ் மகன் ஏகநாதன் (54) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆட்டோ மற்றும் 50 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஏகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post புதுச்சேரியில் இருந்து ஆட்ேடாவில் புகையிலை கடத்தி வந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Odeda ,Vikravandi ,Villupuram District Police Control Room ,Villupuram SP ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு