×

கொடநாடு கொலை: நீதிமன்ற அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்: புதிய மனு தாக்கல்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் 2017ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை வந்தது. வாளையார் மனோஜ் மட்டும் ஆஜராகி இருந்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘குற்றவாளிகளின் செல்போன் உரையாடல் தொடர்பான தொலை தொடர்புத்துறை விசாரணை அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்,’ என்று தெரிவித்தனர். எதிர்தரப்பு வக்கீல் விஜயன், ‘‘கொடநாடு பகுதியில் கொலை நடந்த இடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, கொடநாடு கொலை வழக்கில் சம்பவ இடத்தில் நீதிமன்ற அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்’’ என்ற மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்வதற்காக வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

The post கொடநாடு கொலை: நீதிமன்ற அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்: புதிய மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Ooty ,Kerala ,Sayan ,Valaiyar Manoj ,Jayalalithaa ,Sasikala ,Koda Nadu ,Kothagiri ,Nilgiri district ,Kodanad ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...