×

வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20 11 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி


ஹோபர்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 11 ரன் வித்தியாசத்தில் வென்றது. பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. வார்னர் – ஜோஷ் இங்லிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவரில் 93 ரன் சேர்க்க, ஆஸி. அணிக்கு அதிரடி தொடக்கம் கிடைத்தது. இங்லிஸ் 39 ரன், மிட்செல் மார்ஷ் 16 ரன்னில் வெளியேற, வார்னர் 70 ரன் (36 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அல்ஜாரி பந்துவீச்சில் பூரன் வசம் பிடிபட்டார்.

மேக்ஸ்வெல் 10, ஸ்டாய்னிஸ் 9, மேத்யூ வேட் 21 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அப்பாட் கோல்டன் டக் அவுட்டானார். ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது. டிம் டேவிட் 37 ரன் (17 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஸம்பா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரஸ்ஸல் 3, அல்ஜாரி 2, ஹோல்டர், ஷெப்பர்டு தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து, 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

கிங் 53 ரன், சார்லஸ் 42 ரன், பூரன் 18, கேப்டன் பாவெல் 14, ஹோப் 16 ரன் எடுத்தனர். ரஸ்ஸல் 1, ரூதர்போர்டு 7, ரொமாரியோ 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். கடைசி கட்டத்தில் ஹோல்டர் அதிரடியாக விளையாடியும் வெற்றியை வசப்படுத்த முடியவில்லை. ஹோல்டர் 34 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), அகீல் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஸம்பா 3, ஸ்டாய்னிஸ் 2, பெஹரண்டார்ப், மேக்ஸ்வெல், அப்பாட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வார்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி அடிலெய்டில் நாளை நடக்கிறது.

The post வெஸ்ட் இண்டீசுடன் முதல் டி20 11 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி appeared first on Dinakaran.

Tags : Australia ,West Indies ,Hobart ,Bellerive Oval ,Warner ,Josh Inglis ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது