×

இந்தியா- கனடா வர்த்தகம் அதிகரிப்பு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு வௌியுறவுத்துறை இணையமைச்சர் வீ.முரளிதரன் அளித்த பதிலில், “இந்தியா கனடா இருதரப்பு வர்த்தகம், கனடாவுக்கான ஏற்றுமதிகள் கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023ல் உயர்ந்துள்ளது. 2022ல் இந்திய கனடா இடையே சரக்கு வர்த்தகம் ரூ.57,000 கோடியாக இருந்தது. இது 2023ம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் ரூ68,000 கோடியாக வளர்ச்சி கண்டது.

2022ல் கனடாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக இருந்தது. இது 2023ல் ரூ.34,000 கோடியாக உயர்ந்தது. கனடாவில் தற்போது 2,30,000 இந்தியா மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் உள்பட வௌிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமை” என்று கூறினார்.

The post இந்தியா- கனடா வர்த்தகம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Canada ,New Delhi ,Lok Sabha ,Minister of State for Energy V. Muralitharan ,Dinakaran ,
× RELATED கனடா பிரதமர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: இந்தியா கண்டிப்பு