×

வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: கும்மிடிப்பூண்டி அருகே டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா பகுதியில் நேற்று மாலை பாதிரிவேடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்ற மினி சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த மினி வேனுக்குள் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்லப்படுவது போலீசாருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மினி வேனுடன் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வேனை ஓட்டி வந்த டிரைவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் சுண்ணாம்புகுளம் கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர் கோகுல் (22) எனத் தெரியவந்தது. இவர் கும்மிடிப்பூண்டி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி சேகரித்து, அவற்றை மூட்டையாக கட்டி, ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வேன் டிரைவர் கோகுலை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட வேன் டிரைவர் கோகுலிடம் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: கும்மிடிப்பூண்டி அருகே டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Patirivedu Police ,Pallawada ,Andhra ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே நிபந்தனை...