×

ப்ரோக்கோலி நூடுல்ஸ்

தேவையானவை

நூடுல்ஸ் – 1 கப்
ப்ரோக்கோலி – 1 கப்
குடை மிளகாய் – 1 (சிறியது)
கேரட் – 1
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

நூடுல்ஸை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், ப்ரோக்கோலியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும், நறுக்கிய குடைமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேக வைத்த ப்ரோக்கோலி சேர்த்து வதக்கவும். பின்னர், நூடுல்ஸ் சேர்த்து, அதனுடன் சில்லி சாஸ் மற்றும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். பலன்கள்: ப்ரோக்கோலி புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கிறது. வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக் கீரையினைப் போல் ப்ரோக்கோலியும் ஞாபக சக்தியினை அதிகரிக்கிறது.

The post ப்ரோக்கோலி நூடுல்ஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED டொமேட்டோ ஜூஸ்