×

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்

சென்னை: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார். அதிகாரிகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோரை கண்காணித்து, அவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்கவும் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வணிகம் செய்பவர்கள் தாங்கள் வாங்கக்கூடிய பொருட்களுக்கு மாநில அரசுக்கு வரி என்ற ஒரு தொகையை செலுத்த வேண்டும் ஆனால் வணிகம் நிறுவனங்கள் அந்த தொகையை செலுத்தவில்லை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் தயாரித்து அதன் மூலமாக வணிகம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இழப்பு ஏற்படுகிறது, இதனை கருத்தில் கொண்டு தற்போது வணிகத்துறை அமைச்சர் தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் தயாரித்து வணிகம் செய்பவர்களின் ஜிஎஸ்டி பதிவெண் என்பது முடக்கம் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக வணிகம் செய்பவர்கள் அதன் முலமாக வணிகம் செய்யாத வகையில் வாய்ப்புகள் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலிபில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்பவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவு எண் முடக்கம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,Chennai ,Minister of Business Taxes and Registries ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...