×

கீரை மண்டி

தேவையானவை:

கீரை ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்),
சின்ன வெங்காயம் 10,
பூண்டு 5 பல்,
பச்சை மிளகாய் 2,
அரிசி கழுவிய நீர் 2 கப்,
தேங்காய்ப் பால் கால் கப்,
கடுகு,
வெந்தயம் தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 2,
எண்ணெய், உப்பு
தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கினால் கீரை மண்டி தயார். (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக்கூடாது).

The post கீரை மண்டி appeared first on Dinakaran.

Tags :
× RELATED பனீர் கபாப்