×

ஊட்டி-மசினகுடி சாலையில் பூத்துக் குலுங்கும் போகன் வில்லா பூக்கள்

ஊட்டி: ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் கல்லட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் போகன் வில்லா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான மலர்கள் சாலையோரம் மற்றும் வேலிகளில் பூத்துக் காணப்படும். குறிப்பாக போகன் வில்லா மலர்கள் குடியிருப்புகள் மற்றும் சாலையோரங்களில் அதிக அளவு பூத்துக் காணப்படும். இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்து காணப்படும் இந்த மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

பொதுவாக இந்த மலர்கள் பனிக்காலங்களில் பூத்துக் காணப்படும். ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில் கல்லட்டி மலை பாதையில் பல்வேறு இடங்களிலும் இளஞ்சிவப்பு நிற போகன் வில்லா மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனால் இவ்வழித்தடத்தில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலர்களை புகைப்படம் எடுத்து மகிழ்வது மட்டுமின்றி அதன் அருகில் சென்று செல்பி எடுத்து செல்கின்றனர். கல்லட்டி மலைப்பாதை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் தற்போது இந்த போகன் வில்லா மலர்கள் பூத்து காணப்படுகிறது.

The post ஊட்டி-மசினகுடி சாலையில் பூத்துக் குலுங்கும் போகன் வில்லா பூக்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty-Masinakudy road ,Ooty ,Masinagudi ,Bogan Villa ,Kallati ,Nilgiris district ,Bogan Villa… ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...