- பாஜக அரசு
- தேவேந்திர குல வேலார்
- பிரதமர் மோடி
- கிருஷ்ணசுவாமி
- சென்னை
- புதிய தமிழரசுக் கட்சி
- ஜனாதிபதி
- கிருஷ்ணசாமி
- தேவேந்திர
சென்னை: தேவேந்திர குல வேளாளர் மக்களை பாஜக அரசு ஏமாற்றிவிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
பாஜக அரசு ஏமாற்றிவிட்டது: கிருஷ்ணசாமி
பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற விடுத்த கோரிக்கையை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. கூட்டணியில் அங்கம் வகித்தபோதும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தராமல் பாஜக அரசு ஏமாற்றிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு கும்பலோடு நின்று கும்பிடு போட போகமாட்டேன். இனிமேல் பிரதமர் மோடியை தனியாகத்தான் சந்தித்துப் பேசுவேன் என்றும் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் லட்சியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் புதிய தமிழகம்?
வெற்றி பெறும் வாய்ப்புள்ள வலுவான கூட்டணியில்தான் புதிய தமிழகம் இடம்பெறும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கிறதா, இல்லையா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுகவே கூட்டணியில் இருந்து விலகிச் சென்றுவிட்டது இவ்வாறு கூறியுள்ளார்.
The post தேவேந்திர குல வேளாளர் மக்களை பாஜக அரசு ஏமாற்றிவிட்டது; பிரதமர் மோடிக்கு கும்பலோடு நின்று கும்பிடு போட போகமாட்டேன்: கிருஷ்ணசாமி ஆவேசம் ..!! appeared first on Dinakaran.