×

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது: குடுகுடுப்பைக்காரர் பிரசாரம்

கோவை: சூலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு குடுகுடுப்பைக்காரர் வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், முன்னணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் தங்களது பிரசாரத்தை துவங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் சேலத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை அடித்து பொதுமக்களிடம் ஆதரவு கேட்டார்.

அப்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகாட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு தாங்காது எனக் கூறி நகைச்சுவை கலந்து மக்களை ஈர்க்கும் வகையில் வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரகு துரைராஜ், நகர செயலாளர் விஸ்வநாதன் பாடி, கவுன்சிலர் நடராஜ் உள்ளிட்டோர் சென்று பிரசாரம் செய்தனர்.

The post மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்காது: குடுகுடுப்பைக்காரர் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,KOWAI ,SOLOOR ,KUDUKUPAIKKAR ,DIMUKA ,Tamil Nadu ,Gudukkudakkar ,
× RELATED வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவு