×
Saravana Stores

பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு மனு மீது பிப்ரவரி 12ல் தீர்ப்பு

விழுப்புரம்: பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு மனு மீது பிப்ரவரி 12ல் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு வரும் திங்கள்கிழமை பிப்ரவரி 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி பூர்ணிமா தற்போது தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கானது கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பு இடத்தில் இருந்த பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட செங்கல்பட்டு கண்ணன் ஆகிய இருவர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ டி. போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விசாரணையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சாட்சிகள் அனைத்தும் விசாரணை முடிந்த பிறகு கடந்த ஜூன் 16ம் தேதி நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை ரூ.20,500 அபராதம் விதித்திருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு உடந்தையாக இருந்த எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்திருந்தார். இதனை தொடர்ந்து ராஜேஷ்தாஸ் தரப்பினரும் கண்ணன் தரப்பினரும் தீர்ப்பை எதிர்த்து மனுவினை தாக்கல் செய்திருந்தனர் இந்த மனுவானது கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ராஜேஷ் தாஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் நாடினர். விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்து இரண்டு இடத்திலும் ராஜேஷ்தாஸ் தரப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விழுப்புரம் நீதிமன்றமே பிப்ரவரிக்குள் இந்த வழக்கின் தீர்ப்பை உத்தரவிட உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு மனு மீது பிப்ரவரி 12ல் தீர்ப்பு என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு மனு மீது பிப்ரவரி 12ல் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : TGB Rajeshtas ,DGP ,Rajeshtas ,TGB ,Rajeshtask ,Dinakaran ,
× RELATED மகளிர் சிறைக்கு பெண் அதிகாரிகளை...