×

கோவை மதுக்கரை அருகே தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

கோவை: கோவை மதுக்கரை அருகே தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அறுவடை நகர் அடுத்த விவேகானந்தா சதுக்கம் பகுதியில் தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த புகார் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கோவை அறுவடை நகர் விவேகானந்தா சதுக்கம் பகுதியில் தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு அரை மணிநேரம் முன்பு தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென குடோன் முழுவதும் தற்போது தீ பற்றி எரிந்து வருகிறது.

கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் உள்ள இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோவை புதூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அனைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த தொழிற்சாலையில் பிடித்த தீ அருகாமையில் உள்ள அனைத்து குடோனில் தீ பரவியது. நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சியில் ஈடுப்பட்டுள்னர்.

The post கோவை மதுக்கரை அருகே தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Gowai Madukkari ,KOWAI ,MADUKAR ,Vivekananda Square ,Harvest Nagar ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில்...