×

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு கடத்த இருந்த ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்திற்கு சூட்கேசில் ரகசிய அறை அமைத்து 2.33 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்களை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைர கடத்தல் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுப்பட மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தாய்லாந்து செல்வதற்காக வந்த சென்னையை சேர்ந்த 30 வயது இளைஞரை பிடித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், 2.33 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,004 கேரட் வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் கர்நாடகம் மாநிலத்தில் இருந்து தாய்லாந்திற்கு செல்ல இருந்த விமானத்தில் வைர கற்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்னையை சேர்ந்த 30வயது தக்க வாலிபர் சுற்றுலா செல்ல தாய்லாந்து சென்றுள்ளார்.

அவரது சூட்கேசை சோதனை செய்தபோது அளவுக்கு அதிகமான இடையுள்ளதை கணடறிந்து சோதனை செய்தனர் அதில் 1,004 கேரட் மதிப்புள்ள வைரக்கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். ரூ. 2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்களை பறிமுதல் செய்து அந்த இளைஞரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த கடத்தல் பின்னணியில் யார் யார் ஈடுப்பட்டிருக்கிறார்கள் என்று தொடர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்துக்கு கடத்த இருந்த ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக் கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். appeared first on Dinakaran.

Tags : Customs ,Chennai airport ,Central Revenue Investigation Division ,Thailand ,Dinakaran ,
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...