×

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய மறுக்கும் துணைவேந்தருக்கு எதிராக ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்..!!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய மறுக்கும் துணைவேந்தருக்கு எதிராக ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் பதவியேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்தில் ஏராளமான ஊழல்கள் புகார்கள், ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்த துணைவேந்தர் செயல் அத்தனைக்கும் உறுதுணையாக இருந்தவர் பதிவாளர் தங்கவேல், இந்த பதிவாளர் தங்கவேல் மூலமாக பல்வேறு ஊழல்கள் முறைகேடுகளை செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. இது தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வைத்த தொடர் குற்றச்சாட்டின் அடிப்படையில் அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி ஐஏஎஸ் ஆய்வு குழு மூலம் பல்வேறு ஆய்வு நடத்தினர். இந்த பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அந்த ஆய்வில் முறைகேடுகள் செய்தது உறுதியானது. மேலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்த நிலையில் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கத்தினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் .

பெரியார் பல்கலை. பதிவாளரை உடனே சஸ்பெண்ட் செய்க: ஆசிரியர் சங்கம்

துணைவேந்தர், பதிவாளர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர், பதிவாளரின் நடவடிக்கைகள் எதுவுமே சரியானதாக இல்லை. பல்கலைக்கழக பதிவாளர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் அபாயகரமானது என ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்

பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய மறுக்கும் துணைவேந்தருக்கு எதிராக பல்கலை. ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலுக்குள் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். உயர்கல்வித்துறை அரசு செயலாளர் பரிந்துரை செய்தும் பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய மறுக்கும் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தர் மறுப்பு

யாரும் செய்யாத முறைகேடுகளை பதிவாளர் செய்ததாக உயர்கல்வித்துறை செயலாளர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் மீதும் சில ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய மறுக்கும் துணைவேந்தருக்கு எதிராக ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Teachers Association ,Salem Periyar University ,Chennai ,Jeganathan ,Periyar University ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...