×
Saravana Stores

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

டெல்லி: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ஒன்றிய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு காலமானார். இது குறித்து இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி; வேளாண்துறை வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பதை ஆற்றியவர் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். உணவுதானிய உற்பத்தியில் இந்தியா தன்னிடைவு அடைந்ததில் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்கு முக்கியமானதாகும். வேளாண் துறையை நவீனமயமாக்கியதில் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்கு அளப்பரியது.

முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி; நாட்டுக்காக சரண்சிங் ஆற்றிய சேவை ஈடு இணையற்றது. தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக பாடுபட்டவர் சரண்சிங். நாட்டிற்கு சரண் சிங் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

1979 முதல் 1980ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் சவுத்ரி சரண் சிங். விவசாயிகளின் உரிமைகள், நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சரண் சிங். எந்த பதவியில் இருந்தாலும் தேசத்தைக் கட்டியெழுப்ப சரண் சிங் உத்வேகம் அளித்தார். எந்த பதவியில் இருந்தாலும் தேசத்தைக் கட்டியெழுப்ப சரண் சிங் உத்வேகம் அளித்தார் என்று கூறினார்.

நரசிம்மராவ் குறித்து வெளியிட்டுள்ள பதிவில்; ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரசிம்மராவ் அம்மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் நரசிம்மராவ் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 9ஆவது பிரதமராக பதவி வகித்தவர் நரசிம்மராவ். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற நரசிம்மராவின் தொலைநோக்கு பார்வை உதவியது. வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவற்றில் நரசிம்மராவ் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டை வழிநடத்தியது என்று கூறினார்.

The post வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,M. S. ,Union Government ,Tamil Nadu ,M. S. Swaminathan ,PM Modi ,
× RELATED நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம்...