×
Saravana Stores

உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலி: ஊரடங்கு உத்தரவு அமல்

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தாவணி பகுதியில் கலவரம் காரணமாக பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹல்தாவணி பகுதியில் மதரஸாவை இடிக்க முயன்றபோது போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ்காரர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால் வன்முறை மூண்டது; 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஹல்தாவணி பகுதியில் பதற்றம் நீடிப்பதை அடுத்து உத்தரகாண்ட் அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்ட்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில் சட்ட விரோதமாக மதரஸா கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்து அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்களை இடிக்க சென்றனர். கட்டிடங்களை இடிப்பதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நீதிமன்ற உத்தரவு என்று கூறி அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கினர்.

இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிலர், அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் அதிகாரிகள் சிலர் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நிலமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தொடந்து அந்த கும்பல் போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 250-பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஹல்ட்வானியில் கலவர சூழல் நிலவுவதால் அங்கு (144) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஹல்ட்வானி, நைனிடால் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் பதற்றமான பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரகாண்ட் மாநில முதல்வர் சிங் தாமி, அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

The post உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலி: ஊரடங்கு உத்தரவு அமல் appeared first on Dinakaran.

Tags : Madrasa demolition ,Uttarakhand ,Haldavani ,Dinakaran ,
× RELATED சிங்கள் புவா (உத்தரகாண்ட்)