×

ரெட்டியார்பாளையத்தில் கேஸ் ஏஜென்சி, பாத்திரக்கடையை உடைத்து ₹10 லட்சம் கொள்ளை

புதுச்சேரி, பிப். 9: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மூலகுளம் சந்திப்பில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சி, முன்னாள் அமைச்சருக்கு சொந்தமானது. இதனிடையே நேற்று அங்குள்ள பணியாளர்கள் கேஸ் ஏஜென்சியை திறக்க வந்தபோது ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று கண்ணாடி கதவுகளை திறந்து பார்த்தபோது அங்கு கல்லாவில் இருந்த ரூ.9 லட்சம் வசூல் பணம் ெகாள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஏஜென்சி மேலாளரிடம் புகாரை பெற்று விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இதேபோல் ரெட்டியார்பாளையம் மெயின் ரோட்டில் (புதுச்சேரி-விழுப்புரம் சாலை) உள்ள பாத்திரக்கடையிலும் ெஷட்டர் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாகவும் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக கொள்ளை நடந்த 2 பகுதியிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கருப்பு நிற காரில் வந்திறங்கிய 3 பேர் கும்பல், ஷெட்டரை உடைத்து துணிகரமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் காட்சி பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு வில்லியனூர் பகுதியில் இதேபோல் கடைகளின் அடுத்தடுத்து ெஷட்டரை உடைத்து திருடிய ஆசாமிகள் சிக்கிய நிலையில், அவர்களது கூட்டாளிகள் கைவரிசை காட்டினார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன்பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றன.

The post ரெட்டியார்பாளையத்தில் கேஸ் ஏஜென்சி, பாத்திரக்கடையை உடைத்து ₹10 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Retiarpalayam ,Puducherry ,Private Case Agency ,Retiarpalayam Muellkulam Junction ,Case Agency ,Dinakaran ,
× RELATED புதுவை ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு...