×

ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கீழக்கரை, பிப்.9: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் உணவகங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாட பயன்பாட்டிற்கு டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து விற்கும் குடிநீரை குடம் ரூ.12 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை இன்றும் தொடர்கிறது. குடிநீர் எடுத்து வரும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் காலை, மாலை பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ, மாணவியரை ஏற்றி வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் தேவையற்ற பிரச்னை ஏற்படுகிறது.

தண்ணீர் நிரப்பி வரும் கனரக வாகனங்கள் உதவியாளர் யாருமின்றி ஓட்டுநர் மட்டுமே வாகனத்தை இயக்கி வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. உதவியாளர் வழிகாட்டல் இன்றி வாகனத்தை பின்புறமாக இயக்கியதால் மூதாட்டி ஒருவர் விபத்தில் சிக்கி இறந்தார்.  குடிநீர் வாகனங்கள் சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம், போலீசார் நகர் நலன் விரும்பிகள் இது சம்பந்தமாக கூட்டம் நடத்தினால் இது கானல் நீராகவே உள்ளது.

இந்த கூட்டங்களில் எடுக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்கள் கண்காணிக்காமல் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கிறது. தவறு செய்யும் லாரி உரிமையாளர்கள் நடத்துனர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Keezhakarai ,
× RELATED கீழக்கரை நகர் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை