×

தேனி அல்லிநகரத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

தேனி, பிப். 9: தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 7 மற்றும் 10வது வார்டுகளில் புதிய அங்கன்வாடி மையத்தை பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் திறந்து வைத்தார். தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 7 மற்றும் 10வது வார்டில், பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சரவணக்குமார் அவரது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். இந்நிதி மூலமாக இப்பகுதியில் அங்கன்வாடிமையம் கட்டப்பட்டு, ஆழ்துளை கிணறு மற்றும் சிறு மின்விசை பம்பு ஆகியவை அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று அல்லிநகரத்தில் நடந்தது. விழாவில் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தும், ஆழ்துளைக்கிணறு, சிறு மின்விசை பம்பு ஆகியற்றை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தேனி அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியாபாலமுருகன், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர்பாஷா, தேனி நகர திமுக செயலாளர் நாராயணபாண்டியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் முனியம்மாள் முனியாண்டி, திமுக நகர நிர்வாகிகள், கவுன்சிலர்கள், வார்டு திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தேனி அல்லிநகரத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : new Anganwadi Center ,Theni Allinagar ,Periyakulam ,MLA ,Saravanakumar ,Anganwadi center ,Wards 7 ,10 ,Theni Allinagaram Municipality ,Ward ,Periyakulam Constituency ,Theni Allinagaram ,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்