×

கொளுத்த துவங்கியது வெயில் பக்தர்களுக்கு நிழற்பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

பழநி, பிப். 9: கொளுத்தும் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க நிழற்பந்தல் அமைக்கும் பணியில் பழநி கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஜன.19ம் தேதி பழநி கோயிலில் தைப்பூச திருவிழா துவங்கியது. 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து சென்றனர். வரும் மார்ச் 8ம் தேதி பங்குன உத்திர திருவிழா துவங்க உள்ளது.

தொடர்ந்து கோடை விடுமுறை என ஜூன் மாதம் வரை பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கோடை விடுமுறை காலத்தில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் கோயில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பக்தர்கள் அடிவாரம் கிரிவீதி மற்றும் சன்னதி வீதிகளில் தற்போதே வெயிலில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கடும் வெப்பம் நிலவி வருகிறது.

இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இதனை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் அதிகளவு நடந்து செல்லும் பாதவிநாயகர் கோயில், வடக்கு கிரிவீதி , சன்னதி வீதி பகுதிகளில் கோயில் நிர்வாகம் சார்பில் தகரத்தால் ஆன நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகத்தின் இந்நடவடிக்கை பக்தர்களிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

The post கொளுத்த துவங்கியது வெயில் பக்தர்களுக்கு நிழற்பந்தல் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kolhutta ,Palani ,Palani temple ,Palani Thandayuthapani Swami Temple ,Tamil Nadu ,Kolutha ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்